PUBLISHED ON : நவ 11, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூரியனின் நிறம்
சூரிய ஒளி என்பது நிறமாலை நிறங்களின் கலவை. காற்றில் ஒளி பரவும்போது, காற்று மூலக்கூறுகளால் ஒளி சிதறடிக்கப்படும். இது சம அளவில் இல்லாமல், ஒளியின் அலைநீளத்துக்கு ஏற்ப வேறுபடும். சிவப்பை விட ஊதா, 16 மடங்கு ஒளிப்பரவல் அடைகிறது. எனவே கூடுதலான காற்று அடுக்கின் வழியே ஊடுருவி அடிவானத்திலிருந்து வரும் சூரிய ஒளியில் முற்றிலும் ஊதா நிறம் சிதறடிக்கப்பட்டுவிடும். ஒப்பீட்டளவில் சிவப்பு குறைவாகத்தான் சிதறியிருக்கும். அடிவானச் சூரியனில் கூடுதல் சிவப்பு மிஞ்சி இருக்கும். இதனால் ஆரஞ்சு கலந்த சிவப்பாக அடிவானத்தில் தென்படுகிறது.

