PUBLISHED ON : மார் 14, 2026 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விண்வெளியில் கண்ணாடி
மின்சாரம், விவசாயம், தொழிற்சாலை உட்பட பல துறைகளுக்கும் சூரிய ஒளி தேவை. அமெரிக்காவின் 'ரெப்ளக்ட் ஆர்பிடல்' நிறுவனம், சூரியஒளி அனைத்து நேரமும் பூமியில் விழும்படி விண்வெளியில் பிரத்யேக கண்ணாடி நிறுவும் திட்டத்தை தொடங்க உள்ளது. இதன் விட்டம் 60 அடி. பூமியில் இருந்து 600 கி.மீ., உயரத்தில் நிலைநிறுத்தப்படும். இது சூரிய ஒளியை உள்வாங்கி கண்ணாடி விரிந்து பூமியின் ஒரு பகுதியை 4.8 கி.மீ., அகலத்தில் ஒளிரச் செய்யும். இது 24 மணி நேரமும் சூரிய ஒளி ஆலை செயல்படுவதற்கு உதவும். 2035க்குள்
50 ஆயிரம் கண்ணாடிகளை நிறுவ திட்டமிட்டுள்ளது.
******

