உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 21, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
இதயத்தை பாதுகாக்கும் தர்பூசணி
கோடையில் உடலில் நீர்சத்தை தக்க வைப்பதில் தர்பூசணி பழங்கள் உதவுகின்றன. இதில் நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, ஏ உள்ளிட்ட பல ஊட்டச்சத்துகள் உள்ளன. இதில் குறைந்தளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையை கட்டுப்
படுத்தவும் உதவுகிறது. அடிக்கடி தர்பூசணி பழங்கள் சாப்பிடுவது இதயம், ரத்த நாளங்களின் செயல்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என அமெரிக்காவின் லுாசியானா பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. பொதுவாக தினசரி உணவில் 2 கப் பழங்கள் இருக்க வேண்டும் என அமெரிக்க சுகாதாரத்துறை வலியுறுத்துகிறது.
