உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 24, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
எரிமலை சாம்பலின் துாரம்
எரிமலை வெடிப்புகளின் போது, அதன் சாம்பல் புகை செல்லும் துாரத்துக்கும், அந்த எரிமலை வெடிப்புகளின் அளவுக்கும் எவ்வித தொடர்பில்லை என அமெரிக்காவின் ஆண்ட்ரூஸ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. சிறிய எரிமலை வெடிப்பாக இருந்தாலும் கூட, அதன் சாம்பல் புகை நீண்டதுாரம் சென்றதை கண்டுபிடித்துள்ளனர்.
686ம் ஆண்டில் அமெரிக்காவின் ஒரேகான் பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதிலிருந்து கிளம்பிய சாம்பல் புகை 5000 கி.மீ., துாரம் சென்றது. அளவில் சிறியதாக இருந்த இது முன்பு கணிக்கப்பட்டதை விட அதிக துாரம் சென்றது கண்டறியப்பட்டது.
