தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம் :தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் :தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் :தகவல் சுரங்கம்


PUBLISHED ON : மார் 31, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 31, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

அறிவுத்திறன் எப்படி

மனிதர்களின் மூளையின் அளவு 1930 - 1970 வரை இருந்தவர்களுடன் ஒப்பிடும்போது தற்போது 7 சதவீதம் அளவுக்கு பெரிதாகியுள்ளது. தற்போதைய தலைமுறையினரின் சராசரி மூளை அளவு 1400 கிராம். 1930களில் சராசரி அளவு 1234 கிராம் என இருந்தது. இது இளம் தலைமுறையினரிடம் 'அல்சைமர்' ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. இருப்பினும் அறிவுத்திறனை சோதிக்கும் 'ஐ.கியூ.,' திறனில், 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்களை விட, தற்போதைய தலைமுறையினர் குறைவாக உள்ளனர் என அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.

தகவல் சுரங்கம்

உயரமான உலக அதிசயம்

உலக அதிசயங்களில் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவர். இதன் உயரம் 1083 அடி. தரைப்பகுதியில் அகலம் 410 அடி. இதில் நான்கு மாடிகள் உள்ளன. கோபுரத்துக்கு மேல் செல்வதற்கு 300 படிகள் உள்ளன.

5 லிப்ட் வசதியும் உள்ளது. 7300 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டது. 7 ஆண்டுக்கு ஒருமுறை வண்ணம் தீட்டப்படுகிறது. இதை வடிவமைத்தவர் கஸ்டேவ் ஈபிள். இதன் கட்டுமானப்பணி 1887 ஜன.28ல் தொடங்கப்பட்டது.22 மாதங்களுக்குப்பின் 1889 மார்ச் 31ல் முடிக்கப்பட்டது. இத்தினத்தை நினைவுபடுத்தும் விதமாக மார்ச் 31ல் ஈபிள் டவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us