தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்


PUBLISHED ON : ஏப் 04, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

தென்னையின் பலம்

புயல் வீசும் நேரத்தில் தென்னை மரங்கள் எளிதில் விழுவதில்லை. அதற்கு காரணம் அவற்றின் திசுக்களின் அமைப்பு தான். தென்னை மரத்தில் வெளிப்பகுதி கனமாகவும், உட்பகுதி பஞ்சு மாதிரியும் இருக்கும். அது ஓரளவு வளைந்து கொடுக்கும் தன்மையைப் பெற்றிருக்கும். இதனால் காற்று வீசும் போது இணக்கமாக ஈடு கொடுத்து, மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடும். எனவே எளிதாக விழுவதில்லை. பனை போன்ற தாவரங்கள் புல் இனத்தை சேர்ந்தவை. அதன் திசுக்கள் மாறுபட்டுள்ளன. இதனால் புயல் நேரத்தில் இவை விழுவதற்கு வாய்ப்பு அதிகம்.

தகவல் சுரங்கம்

உலக கேரட் தினம்

ஆரோக்கியமான கண், சருமம், உடல் வளர்ச்சிக்கு கேரட் பயன்தருகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் பி6 சத்துகள் உள்ளன. கேரட்டின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப். 4ல் உலக கேரட் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். ஊதா, கருப்பு, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் நிற கேரட்களும் பயிரிடப்படுகிறது. உலகளவில் 2018ல் 4 கோடி டன் கேரட் விளைவிக்கப்பட்டது என ஐ.நா.,வின் உணவு விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. கேரட்டின் பூர்வீகம் ஈரான், ஆப்கன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us