தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் :தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் :தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் :தகவல் சுரங்கம்


PUBLISHED ON : மே 09, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

பழத்துக்குள் ஒளிந்திருக்கும் பூ

இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம். இதன் பரந்து விரிந்த கிளைகளை தாங்குவதற்கு அதன்

விழுதுகள் பயன்படுகின்றன. ஆலமரத்தின் பூக்கள் மற்ற தாவரங்களைப் போல் வெளிபடையாகப் பூப்பதில்லை. இதன் பழத்துக்கு உள்ளேயே அதன் பூவும் இருக்கிறது. ஆலமரத்தின் பழத்தை எடுத்து நறுக்கிப் பார்த்தால் உள்ளே பூ இருப்பதை பார்க்கலாம். இதை 'நடுநிலை மலர்கள்' என விஞ்ஞானிகள்அழைக்கின்றனர். உலகின் பெரிய ஆலமரம் மேற்கு வங்கத்தின் கோல்கட்டா அருகே ஹவுராவில் உள்ள தாவரவியல் பூங்காவில் உள்ளது.

தகவல் சுரங்கம்

வெள்ளி நதி

உலகின் அகலமான ஆறு தென் அமெரிக்காவின் உருகுவேயில் உள்ளது. உருகுவே ஆறு, பனாமா ஆறும் ஒன்றாக கலக்கும் இடத்தில் இந்த ஆறு உருவாகிறது. இதன் பெயர் 'லி பிளாட்டா' ஆறு. இது 'வெள்ளி நதி' எனவும் அழைக்கப்படுகிறது. இதன் நீளம் 290 கி.மீ., ஆறு தொடங்கும் இடத்தில் இதன் அகலம் 2 கி.மீ., பின் துாரம் செல்ல இதன் அதிகபட்ச அகலம் 220 கி.மீ. இதனால் பார்ப்பதற்கு இது 'புனல்' வடிவத்தில் உள்ளது. உருகுவே, அர்ஜென்டினா எல்லை பகுதியில் பாய்ந்து அட்லாண்டிக் கடலில் கலக்கிறது. இதற்கு ஆறு துணை ஆறுகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us