/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஜூலை 14, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
இயற்கைக்கு பாதுகாப்பு
உலகிலுள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக 1948ல் தொடங்கப்பட்டதுதான் சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் (ஐ.யு.சி.என்.,). இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் கிளான்ட். தற்போதைய சூழலியல் பிரச்னைகளுக்கான நடைமுறை தீர்வு காணவும், அதனால் ஏற்பட்டு உள்ள சவால்களை எதிர்கொள்ளவும் உதவுவதே இதன் நோக்கம். ஆபத்துக்கு உள்ளாகும், அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்கும் விதமாக அவற்றை பட்டியலிட்டு ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இதன்கீழ் 170 நாடுகளை சேர்ந்த 1400 அரசு, அரசு சாரா நிறுவனங்கள் செயல்படுகின்றன.
தகவல் சுரங்கம்
நட்சத்திரம் மின்னுவது ஏன்
வானில் நட்சத்திரம் மின்னுவதை பார்த்திருப்போம். இவை சூரியனை விடவும் பெரியது. இருப்பினும் சூரியனை விட பல கோடி கி.மீ., தொலைவில் உள்ளதால் சிறியதாக தெரிகின்றன. வானத்தில் காற்று அடுக்குகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. காற்று மண்டலத்துக்கு தொலைவில் இருந்து வரும், விண்மீன் ஒளிக்கதிர் இந்த அசையும் காற்று மண்டலத்தில் புகுந்து வரும்போது, சற்றே அசைவதுபோல தென்படும். அதுதான் நட்சத்திரங்கள் மின்னுவது போல காட்சி தருகிறது. ஒளி பூமியை வந்தடைய பல லட்சம் ஆண்டுகள் ஆகின்றன.