/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: தாவரங்களின் உணவு
/
அறிவியல் ஆயிரம்: தாவரங்களின் உணவு
PUBLISHED ON : ஆக 22, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
தாவரங்களின் உணவு
மனிதர்கள், விலங்குகள் போல தாவரங்களுக்கும் உணவு தேவை. ஆனால் அவை தானாகவே 'ஒளிச்சேர்க்கை' மூலம் தயாரித்துக்கொள்ளும். ஒளிச் சேர்க்கை என்பது பச்சையம் (குளோரோபில்), நீர், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றை பயன்படுத்தி உணவை தயாரிக்கும் முறை. வேர் வழியாக நீர் உறிஞ்சப்பட்டு இலைகளுக்கு அனுப்பப்படுகிறது. இலைகளின் துளைகள் வழியே காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடு உள்ளிழுக்கப்படுகிறது. இலையில் உள்ள பச்சையம் சூரிய ஒளியை எடுத்துக்கொள்ள உதவுகிறது. இதுவே இலையின் பச்சை நிறத்துக்கும் காரணம்.