தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்


PUBLISHED ON : மே 19, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 19, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

வெப்பமான கோடை

பூமியின் வடக்கு அரைக்கோள பகுதியில் (ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா) கடந்த 2000 ஆண்டுகளில் 2023 கோடைதான் மிக வெப்பமான கோடை என பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதற்கு பருவநிலை மாற்றமே காரணம். உலகில் தொழில்புரட்சி தொடங்கிய 1850க்கு முன் ஒப்பிடும் போது 2023ல் சராசரி வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. பிரிட்டனில் இதற்கு முந்தைய வெப்பமான கோடை, 2019ல் 16.48 டிகிரி செல்சியஸ் பதிவானது. 2023ல் இது 16.77 டிகிரி செல்சியசாக பதிவானது.

தகவல் சுரங்கம்

எவரெஸ்டில் ஆதிக்கம்

உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட் (29,031 அடி). இதில் அதிகமுறை ஏறி சாதனை படைத்தவர் நேபாளத்தின் காமி ரீட்டா. 1970ல் பிறந்த இவர் ஷெர்பா இனத்தை சேர்ந்தவர். இதுவரை 29 முறை எவரெஸ்டில் ஏறியுள்ளார். 1994ல் தன் 24 வயதில் முதன்முறை எவரெஸ்டில் ஏறினார். 2018ல் உலகில் அதிகமுறை (22) எவரெஸ்டில் ஏறியவர் என்ற சாதனை படைத்தார். அப்போது இவர், 'ஓய்வுபெறுவதற்கு முன் 25 முறை ஏறுவதற்கு திட்டமிட்டுள்ளேன்' என்றார். ஆனால் தொடர்ந்து சாதித்த இவர் சமீபத்தில் 29வது முறை மலையேற்றம் செய்து சாதித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us