உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 16, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
எரிந்த குப்பையின் சாம்பல் மூலம் கடலில் 350 ஏக்கர் பசுமை தீவை சிங்கப்பூர் உருவாக்கியுள்ளது. அந்நாட்டில் தினமும் சேரும் திடக்கழிவுகள், எரிசக்தி தயாரிக்கும் நிலையங்களில் எரிக்கப்படுகிறது. இதனால் மின்சாரமும் கிடைக்கிறது.
சாம்பலாக்கப்படுவதால் குப்பையின் அளவும் 90 சதவீதம் குறைகிறது. கடல் நடுவே சுற்றி பாறைகளை கொண்டு சுவர் எழுப்பி, உள்புறம் பிரத்யேக சவ்வுகள் அமைக்கப்பட்டன. இதனால் நச்சுத்தன்மை வாய்ந்த திரவம், கடல் நீரில் கலப்பது தடுக்கப்பட்டது. உள்ளே சாம்பல் கொட்டி நிரப்பி நிலப்பகுதி தீவாக மாற்றினர்.
