தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : ஜன 05, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 05, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டாட்காம்



மார்கழி கோயில்



மார்கழியில் பாடப்படும் திருப்பாவை தோன்றிய ஊர் என்பதால், மார்கழியில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கூடுதல் சிறப்பாகும்.

பால்கோவா, ஆண்டாள் மங்கள ஸ்நானப் பவுடர், வாசனை மூலிகைகளால் செய்யப்படும் பச்சைக்கிளி தவிர பெட்டி ராட்டை களுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பிடம் பெற்றதாகும். www.srivilliputhur.com என்ற வெப்சைட்டில், ஸ்ரீவில்லிபுத்தூர் குறித்து அனைத்து அரிய தகவல் களும் கிடைக்கின்றன. தமிழக அரசின் சின்னத்தில் இடம் பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தின் அழகிய போட்டோக்களை, இந்த வெப்சைட்டில் இருந்து டவுண்லோடு செய்யலாம்.



குளிர்கால ஆப்பிள்



தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரின் துணை தேவையில்லை என்பது ஆங்கில பழமொழி. ஆப்பிள் பழம் அதிகமாகக் கிடைக்கும் போது, ஸ்ரீநகரில் வத்தலாக பதப்படுத்தி பாதுகாப்பர். ஆப்பிள் காயில் ஊறுகாய் போடுவர். ஆப்பிள் பழத்தை மட்டும் தனியாக ஜாம் செய்தால் நீர்த்து இருக்கும். எனவே பெக்டின் அதிகமுள்ள பழங்களுடன் சேர்த்து ஜாம் செய்வர். ஆப்பிள் பழங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட் களைச் செய்யும் பயிற்சியும், வர்த்தகமும் சிம்லாவில் தான் அதிகம் நடைபெறுகின்றன. இது பற்றிய தகவல்களை yahoo groupsல் 'simlahangout என்ற வெப்சைட்டில் பெறலாம்.



அறிவியல் ஆயிரம்



அதிகளவில் பனிச்சிகரங்கள்



இந்தியாவில் வடமாநில மலை வாசஸ்தலங்களில், பனி கடுமையாக பொழிகிறது. பனிச்சிகரங்களில் அடர்வு அதிகமாகிறது. இந்தியாவில் பனிச்சிகரங்கள் அதிகம் உள்ள மாநிலமாக சிக்கிம், முறைப்படி ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் மொத்தம் உள்ள நிலப்பரப்பில், சிக்கிம் மாநிலத்தின் பரப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவானதாகும். இந்த ஒரு சதவீத நிலப்பரப்பில் 84 பனிமலைச் சிகரங்கள் உள்ளன. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் சிக்கிமைப் போன்று பனி மலைச் சிகரங்கள் இல்லை.புவி வெப்பமுறுதலால் பனி மலை சிகரங்களின் அளவும், பரப்பும் குறையும் என்பது பொதுவான கருத்தாகும். ஆனால் சிக்கிமில் இதற்கு முன், 21 பனிமலைச் சிகரங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு, புவிவெப்ப உயர்வு, பருவ கால மாற்றம் ஆகியவற்றால், சிக்கிம் மாநிலம் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை என்பதை பனிச் சிகரங்களின் எண்ணிக்கை உயர்வு காட்டுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.



தகவல் சுரங்கம்



கோவாவின் 'மாநில பானம்'



புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் கோவா சென்றவர்கள் அனைவருமே பருகிய மதுபானம் 'பென்னி' ஆகும். இது கோவாவின் 'கலாசார மது பானம்' என அழைக்கப்படுகிறது. கோவாவில் அதிகமாக விளையும் தேங்காய், முந்திரியில் இருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே பென்னியில் இரண்டு வகைகளும் உள்ளது. மதுபானம் என்றாலும் பென்னியில் ஆல்கஹாலோ, செயற்கை ரசாயனப் பொருட்களோ துளியளவும் இல்லை.கோவாவில் தேநீர்க் கடைகளை விட, ரெஸ்டாரன்டு பார்கள் தான் அதிகமாகும். மற்ற மாநிலங்களின் மதுபான விற்பனை விலையை விட, 60 சதவீதம் விலை குறைவாக கோவாவில் கிடைக் கிறது. அனைத்து பிராண்டுகளும் விற்பனை யானாலும் கோவாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கோவாவின் பென்னியைக் குடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கோவாவில் தமிழகத்தை போல இரவில் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே 24 மணி நேரமும் தடையில்லாமல் பென்னி கிடைக்கிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us