தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : ஜன 17, 2018 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2018 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிராமியத் தப்பாட்டம்

பறை முழக்கம் தற்போது தப்பாட்டம் என அழைக்கப்படுகிறது. 'தப்புதல்' என்றால் 'அடித்தல்' என ஒரு பொருள் உள்ளது. அடித்தலோடு ஆட்டமும் சேர்ந்து வருவதால், இது தப்பாட்டம் எனப் பெயர் பெற்றது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை திணைகளுக்கும், ஐந்து வகை பறைகள் இருந்ததாக சங்க இலக்கியம் கூறுகிறது. திருமணம், கோயில், இறப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே தப்பாட்டங்கள் உள்ளன. மற்ற கிராமியக் கலைகளில் ஒருவர் இசைக்க மற்றொருவர் தான் ஆடுவர். தப்பாட்டத்தில் மட்டும் தான், ஆடுபவரே இசைக்க வேண்டும்.

தகவல் சுரங்கம்

இலங்கையின் பழைய தலைநகரம்

இந்தியாவில் இருந்த அரசன் விஜயன், இலங்கை வந்தபோது அவனுடன் வந்த அனுராத என்பவனால் தோற்றுவிக்கப்பட்ட ஊர் தான் இன்றைய இலங்கையின் அனுராதபுரம். அனுராதபுரம் தான் இலங்கையின் பழைய தலைநகராக இருந்தது. உலகில் மனிதர்களால் நடப்பட்ட மிகவும் பழமையான மரம், அனுராதபுரத்தில் உள்ளது. அசோகர் தன் மகள் சங்கமித்திரையை இலங்கைக்கு அனுப்பி புத்த மதத்தைப் பரவச் செய்தார். அப்போது போதிமரத்தின் கிளையை, அனுராதபுரத்தில் புனித மரமாக நடச் செய்தார். அந்த மரம் தற்போதும் அனுராதபுரத்தில் பவுத்தர்களால் வழிபடப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us