உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 14, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
நீர், நிலம், ஆகாயம் மட்டுமின்றி மனித உடல் உறுப்புக்குள்ளும் புகுந்து விட்டது பிளாஸ்டிக் நுண் துகள்கள்.
இந்நிலையில் உலகில் பரவலாக பயன் படுத்தப்படும் ‘பாலிஎதிலீன்’ பிளாஸ்டிக் நுண்துகள், கல்லீரல் கொழுப்பு (பேட்டி லிவர்) பாதிப்புக்கு காரணமாகிறது. மேலும் இது ஆரோக்கியமற்ற உணவு களுடன் சேரும் போது, பாதிப்பை அதிகரிக்கிறது என அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. உடலில் நச்சுகளை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்யும் பணியில் கல்லீரல் ஈடுபடுகிறது. மது, துரித உணவு, உடல் உழைப்பின்மை உள்ளிட்டவற்றால் கல்லீரல் பாதிக்கப்படுகிறது.
