/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : காட்டுத்தீக்கு காரணம்
/
அறிவியல் ஆயிரம் : காட்டுத்தீக்கு காரணம்
PUBLISHED ON : ஜன 13, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
காட்டுத்தீக்கு காரணம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் அந்நாடு போராடுகிறது. உலகில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது இந்நிகழ்வு ஏற்படுகிறது. காடுகளின் அழிவுக்கு காட்டுத்தீ முக்கிய காரணமாகிறது. காடுகள் தோன்றிய காலம் முதலே காட்டுத்தீ நிகழ்வுகளும் தொடங்கின.இதற்கு இயற்கை, மனித தவறு உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. காட்டுத்தீ அதிகரிக்க வெப்பம்,ஆக்சிஜன், எரிபொருள் மூன்றும் முக்கிய காரணியாக அமைகிறது. இதில் ஒரு அளவை குறைத்தால், தீயின் அளவையும் குறைக்கலாம்.