/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிர : பனி இல்லாத ஆர்க்டிக்
/
அறிவியல் ஆயிர : பனி இல்லாத ஆர்க்டிக்
PUBLISHED ON : டிச 07, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூமியின் வட முனையில் அமைந்துள்ளது துருவப் பகுதியான ஆர்க்டிக். அடுத்த மூன்று
ஆண்டுகளில் ஆர்க்டிக் கடல் பகுதி முற்றிலும் பனியில்லாத பிரதேசமாக மாறும் என
விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 300 கம்ப்யூட்டர் உருவகப்படுத்தலை பயன்படுத்தி
இதை கணித்துள்ளனர். இந்தாண்டு ஏற்கனவே 26.5 லட்சம் சதுர கி.மீ., அளவு பனிக்கட்டிகள்
உருகிவிட்டன. இந்நிலையில் முதன்முறையாக 2027 கோடைகாலத்தில் முற்றிலும் பனி
இல்லாத ஆர்க்டிக் கடலை சந்திக்க நேரிடும். ஏற்கனவே அடுத்த 9 - 20 ஆண்டுகளில் இது
நிகழும் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டிருந்தனர்.