/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : நிலவை மோதுமா விண்கல்
/
அறிவியல் ஆயிரம் : நிலவை மோதுமா விண்கல்
PUBLISHED ON : ஏப் 09, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
நிலவை மோதுமா விண்கல்
'2024 ஒய்.ஆர்.4' எனும் விண்கல் 2032 டிச.22ல் பூமி மீது மோதுவதற்கான வாய்ப்புள்ளது என அமெரிக்காவின் 'நாசா', 2024 இறுதியில் கண்டுபிடித்தது. துவக்கத்தில் வாய்ப்பு ஒரு சதவீதம் என இருந்தது. பின் 2.1%, 3.1% என அதிகரித்தது. ஆனால் அடுத்த ஆய்வுகளில் இது 0.004 சதவீதமாக குறைந்து விட்டது. தற்போது இது நிலவு பக்கம் திரும்பியுள்ளது. இந்த விண்கல், 2032 டிச. 22ல் நிலவின் மீது மோதுவதற்கான வாய்ப்பு முன்பு 1.7% என இருந்தது. தற்போது 3.8% ஆக அதிகரித்து உள்ளது. விண்கல் அகலம் 200 அடி. இது 2024 டிச.27ல் 4.34 கோடி கி.மீ., துாரத்தில் இருந்தது.

