/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: ஆபத்தில் நன்னீர் உயிரினங்கள்
/
அறிவியல் ஆயிரம்: ஆபத்தில் நன்னீர் உயிரினங்கள்
PUBLISHED ON : ஜன 12, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
ஆபத்தில் நன்னீர் உயிரினங்கள்
பூமியில் ஆறு, ஏரி, நன்செய் உள்ளிட்ட நன்னீர் பகுதிகளில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. 1970 உடன் ஒப்பிடுகையில் உலகில் நன்னீரில் வாழும் உயிரினங்களில், 25 சதவீதம் அழியும் நிலையில் உள்ளன என இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு (ஐ.யு.சி.என்.,) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின் வடக்கு அரிஜோனா பல்கலை, மீன், நண்டு, இறால், தட்டான் உள்ளிட்ட 23,946 உயிரினங்களை ஆய்வு செய்தது. மாசுபாடு, அணைகளின் பரப்பளவு குறைதல், விவசாய இடங்கள் குறைவது உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளது.