உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 14, 2026 12:19 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
வெந்நீர் ஊற்று உருவானது எப்படி
பூமியில் சில பகுதிகளில் வெந்நீர் ஊற்று உள்ளது. பூமிக்கடியில் எரிமலைகள் இருக்கும் இடங்களில், நிலத்தடி நீரானது அதிக அழுத்தம் காரணமாக கொதிநிலையை அடையும் முன்பே அதிக சூடாகிவிடும். கொதிநிலையைத் தொட்ட உடன், சட்டென்று நீராவியாகி மேல் நோக்கிச் சீறும். ஒரு சில நிமிடங்கள் இப்படி நீராவியும், கொதிநீரும் வெளியேறும். இதுதான் வெந்நீர் ஊற்று. இப்படிதான் இது உருவாகிறது. இவ்வகை நீரூற்றுகளில் தண்ணீர் வெப்பமாக இருக்கும். இந்தியாவில் லடாக், ஹிமாச்சல், ஒடிசா, மஹாராஷ்டிராவில் 300 இடங்களில் இந்த வெந்நீர் ஊற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
