உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 07, 2026 12:40 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
நட்சத்திரம் ஒளிர்வது எப்படி...
வானில் நட்சத்திரம் மின்னுவதை பார்த்திருப்போம். இவை சூரியனை விட பல கோடி கி.மீ., தொலைவில் உள்ளதால், நாம் பார்ப்பதற்கு சிறியதாக தெரிகின்றன. வானத்தில் காற்று அடுக்குகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. காற்று மண்டலத்துக்கு தொலைவில் இருந்து வரும், விண்மீன் ஒளிக்கதிர் இந்த அசையும் காற்று மண்டலத்தில் புகுந்து வரும்போது, சற்றே அசைவதுபோல தென்படும். அதுதான் நட்சத்திரங்கள் மின்னுவது போல காட்சி தருகிறது. நட்சத்திரங்கள் தொலைவில் இருப்பதால் அதன் ஒளி பூமியை வந்தடைய பல ஆண்டுகள் ஆகின்றன.
