உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 31, 2026 12:44 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
யாருக்கு மகிழ்ச்சி அதிகம்
வாழ்க்கை மகிழ்ச்சி, திருப்தியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். பொறுமை, சவால்களை ஏற்றுக்கொள்ளுதல், ஒருவருக்கொருவர் உதவி, பொதுநலன், நம்பிக்கை ஆகிய குணம் கொண்டவர்கள், வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் உள்ளதாக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதற்காக 76 நாடுகளை சேர்ந்த 80 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தியது. பிரிட்டன் மக்கள் 47 வயதில் தங்களின் உச்சபட்ச ஆரோக்கியம், மகிழ்ச்சியை அடைகின்றனர் என ஒரு ஆய்வு சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து இந்த ஆய்வு வெளியாகி உள்ளது.
