உள்ளடக்கத்திற்கு செல்ல

அறிவியல் ஆயிரம் : ஐரோப்பாவை தாக்கும் ஆப்ரிக்கா பாலைவனம்
அறிவியல் ஆயிரம் : ஐரோப்பாவை தாக்கும் ஆப்ரிக்கா பாலைவனம்
PUBLISHED ON : மே 07, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
ஐரோப்பாவை தாக்கும் ஆப்ரிக்கா
உலகின் பெரிய வெப்ப பாலைவனம் சஹாரா. இதன் பரப்பளவு 94 லட்சம் சதுர கி.மீ. இந்த பாலைவனத்தில் இருந்து ஆண்டுக்கு நுாறு கோடி டன் துாசி வளிமண்டலத்தை அடைகிறது. இந்நிலையில் இதன் துாசியால் ஐரோப்பா பாதிக்கப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துஉள்ளனர். இதன்படி பலத்த காற்றால் பாலைவனத்தில் இருந்து கிளம்பும் கனிம துாசி துகள், ஐரோப்பிய பகுதியில் சூரிய ஒளியை சிதறடித்து உறிஞ்சி, அதன் கதிர்வீச்சை குறைக்கிறது. இதனால் சூரிய ஒளி வெளிச்சம் குறைவதால், சோலார் பேனல் செயல்திறன் பாதித்து, மின்சார உற்பத்தி குறையும் என எச்சரித்துள்ளனர்.
