/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தண்ணீரில் குளோரின்
/
அறிவியல் ஆயிரம் : தண்ணீரில் குளோரின்
PUBLISHED ON : அக் 20, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
தண்ணீரில் குளோரின்
குளோரின் தனிமத்தின் அணு எண் 17. இதன் வேதியியல் குறியீடு சி.எல். தனிம அட்டவணையில் புளோரின் - புரோமின் தனிமங்களுக்கு இடையே உள்ளது. 1774ல் சுவீடன் விஞ்ஞானி காரல் வில்ஹெம் ஷீலே இதை கண்டறிந்தார். தண்ணீரின் மொத்த அளவுக்கு ஏற்ப அதில் குறிப்பிட்ட அளவு குளோரின் கலந்தால், தண்ணீரில் உள்ள நச்சு நுண்ணுயிர்களை அழித்து விடும். இதனால் தண்ணீரால் ஏற்படும் நோய்களை குறைக்கலாம். அதே நேரத்தில் குளோரின் அதிகம் கலந்து விட்டால் அது வயிற்றுபோக்கு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.