/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : சூப்பர் மூன் தெரியுமா
/
அறிவியல் ஆயிரம் : சூப்பர் மூன் தெரியுமா
PUBLISHED ON : நவ 05, 2025 12:00 AM

அறிவியல் ஆயிரம்
சூப்பர் மூன் தெரியுமா
கடந்த ஆறு ஆண்டுகளில் பூமிக்கு அருகில் (3,56,980 கி.மீ.,) வரும் 'சூப்பர் மூன்' நிகழ்வு இன்று தோன்றுகிறது. இந்தியாவில் சூரிய மறைவுக்கு பின் தெரியும். பூமி -- நிலவு இடையே சராசரி துாரம் 3.84 லட்சம் கி.மீ., இதில் அதிகமாக 4.06 லட்சம் கி.மீ., குறைவாக 3.56 லட்சம் கி.மீ., துாரத்தில் இருந்து நிலவு, பூமியை சுற்றி வரும். பூமிக்கு அருகில் வரும் போது 'சூப்பர் மூன்' ஏற்படுகிறது. இது சாதாரணமாக தெரியும் நிலவை விட 14% பெரியதாகவும், 30% கூடுதல் ஒளியுடனும் தெரியும். ஒரே நேர்க்கோட்டில் சூரியன், பூமி (நடுவில்), நிலவு வரும்போது 'சூப்பர் மூன்' ஏற்படுகிறது. அடுத்தது டிச.4ல் நிகழும்.

