உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 06, 2026 12:06 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
ஒலி உருவாகும் விதம்
ஒவ்வொரு ஒலிக்கும் குறிப்பிட்ட சில பண்புகள் உள்ளன. நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கு ஒலி முக்கியம். ஒரு பொருள் அதிர்வுக்கு உட்படுத்தப்படும்போது ஒலி உருவாகிறது. ஒலி என்பது ஒருவகை ஆற்றல். ஒலி வெற்றிடத்தில் பரவ இயலாது. ஒலி பரவுவதற்கு காற்று, திரவம், திடப்பொருள் தேவை. ஒலியின் வேகம் திரவங்களை விட திடப்பொருள்களில் அதிகம். ஒலியின் வேகமானது வெப்பநிலை, அழுத்தம், ஈரப்பதம் உள்ளிட்ட பண்புகளை பொறுத்து மாறுபடும். வெப்பநிலை அதிகரிக்கும்போது ஒலி வேகமும் அதிகரிக்கிறது.
