/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : பிப் 08, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
வேகமாக சுற்றும் பூமி
சூரிய குடும்பத்துக்கு வெளியே 'சூப்பர் பூமியை' நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் பெயர் 'டி.ஓ.ஐ., - 715பி'. இது பூமியில் இருந்து 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஒரு ஒளி ஆண்டு என்பது ஓராண்டில் ஒளி கடக்கும் துாரம். இது பூமியை விட 1.5 மடங்கு பெரியது. இது ஒரு சிறிய நட்சத்திரத்தை 19 நாட்களுக்கு ஒருமுறை சுற்றுகிறது. இதிலிருந்து வெளியாகும் குறைந்தளவு வெப்பநிலை, இதன் தரைப்பரப்பில் தண்ணீர் உருவாவதற்கு ஏற்ற நிலையில் உள்ளது. இதில் உயிரினங்கள் வாழும் சூழல் இருக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
தகவல் சுரங்கம்
பெரிய மின்சார நிலையம்
மத்திய பிரதேசத்தில் உள்ள விந்யாச்சல் அனல் மின் நிலையம், இந்தியாவின் பெரிய மின் உற்பத்தி மையம் என அழைக்கப்படுகிறது. இதன் கட்டுமானப்பணி 1982ல் தொடங்கி 1987ல் மின் உற்பத்தி தொடங்கியது. உலகளவில் 9வது இடத்தில் உள்ளது. இங்கு 4760 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரி மூலம் இங்கு மின்சாரம் உற்பத்தி செய்படுகிறது. தேசிய அனல்மின் நிலையம் இதை நடத்துகிறது. இதில் உற்பத்தியாகும் மின்சாரம் ம.பி., குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, சத்தீஸ்கர், டாமன் டையூ, தாதர் நகர் ஹவேலிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

