sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்


PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

சூரியனை சுற்றும் பூமி

பூமி உட்பட அனைத்து கோள்களும், சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மையைக் கண்டறிந்து 1616ம் ஆண்டில் உலகிற்கு தெரியப்படுத்தியவர் 'கலிலியோ கலிலி'. ஆனால் அவர் கூறியதை உண்மை என யாரும் அப்போது நம்பவில்லை. பின்னர் கலிலியோவின் கூற்று உண்மைதான் என உலகம் உணர்ந்தது. அவரது பிறந்த தினம் இன்று. இத்தாலியில் பிப். 15ல் பிறந்தார். கணிதப் பேராசிரியரான அவர் இயற்பியல், வானவியலில் அதிக ஆர்வம் கொண்டு இருந்தார். வானியல் ஆய்வுகளுக்குப் பயன்படுகிற தொலைநோக்கியை (டெலஸ்கோப்) முதன் முதலில் கண்டுபிடித்தார்.

தகவல் சுரங்கம்

நீளமான இயற்கை குகை

இந்தியாவின் நீளமான இயற்கை குகைகளில் ஒன்று போரா. இது ஆந்திராவின் அலுரி சீதாராமா ராஜூ மாவட்டத்தில் அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள ஆனந்தகிரி மலைத்தொடரில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2313 அடி உயரத்தில் உள்ளது. குகையின் ஆழம் 260 அடி. நீளம் 660 அடி. லட்சக்கணக்கான ஆண்டுக்கு முன் கோஸ்தனி ஆறு உருவாகிய போது இக்குகை தோன்றியது. குகைக்குள் இயற்கையாக உருவான பல்வேறு வடிவங்கள் உள்ளன. குகைக்குள் சராசரி வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ். இதன் அருகிலுள்ள (80 கி.மீ.,) விமான, ரயில் நிலையம் விசாகபட்டினம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us