/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : பிப் 16, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
ஆறுகளில் தண்ணீர் பற்றாக்குறை
பூமியில் அதிகரிக்கும் நைட்ரஜன் மாசுபாட்டால் 2050ல் உலகில் மூன்றில் ஒரு பங்கு ஆறுகளில் சுத்தமான தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்படும் என நெதர்லாந்தின் வாஜின்ஜன் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. 10 ஆயிரம் ஆறுகளின் நீர்பிடிப்பு பகுதிகளை ஆய்வு செய்ததில், நைட்ரஜன் மாசு அதிகரித்திருப்பதை கண்டறிந்தனர். இதில் தெற்கு சீனா, மத்திய ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆப்ரிக்கா பகுதி ஆறுகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். 2010ல் எடுத்த ஆய்வில் நான்கில் ஒரு பங்கு ஆறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என கண்டறியப்பட்டிருந்தது.
தகவல் சுரங்கம்
ஆரவல்லியின் அற்புதம்
சீனப்பெருஞ்சுவருக்கு அடுத்து உலகின் இரண்டாவது நீளமான பெருஞ்சுவர் 'கும்பல்ஹார்க்' கோட்டை. இது ராஜஸ்தானின் ராஜமந்த் மாவட்டத்தில் உள்ளது. இதன் அகலம் 6 அடி. நீளம் 36 கி.மீ. இது 15ம் நுாற்றாண்டில் மன்னர் ராணா கும்பாவால் கட்டப்பட்டது. பரப்பளவு 662 ஏக்கர். இது ஆரவல்லி மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 3600 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இக்கோட்டைக்கு 7 வாசல்கள் உள்ளன. இதற்குள் 360 ஹிந்து, ஜெயின் கோயில்கள் உள்ளன. 2013ல் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.