உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 10, 2026 12:15 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
வவ்வால்களின் தனித்தன்மை
பறக்கும் ஒரே பாலுாட்டி வகை உயிரினம் வவ்வால். இதில் 1400 வகைகள் உள்ளன. கூட்டமாக வாழும். சில வகை வவ்வால்கள், பழங்களை உண்டு வாழ்வதால் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவுகிறது. இதனால் புதிய மரபணு தாவரங்கள் உருவாகின்றன. இதன் அதிநுட்ப மோப்ப சக்தியால், பூச்சிகள், வண்டுகள் உட்பட தன் இரை இருக்கும் இடத்தை எளிதாக கண்டறியும். இவை இரவில் தான் இரை தேடி செல்லும். இதற்கான தனித்தன்மை இதற்கு உள்ளது. பகலில் இருள் சூழ்ந்த கட்டடம், குகை பகுதியில் தலைகீழாக தொங்கும். இதன் ஆயுட்காலம் 10 - 30 ஆண்டுகள்.
