உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 20, 2026 10:53 PM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
டைட்டானிக் 'லைப் ஜாக்கெட்' ஏலம்
'டைட்டானிக்' கப்பல் 1912 ஏப்., 15ல் அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. 1500 பேர் பலியாகினர். 700 பேர் காப்பாற்றப்பட்டனர். இக்கப்பலில் உயிர் பிழைத்த பயணிகள் அணிந்திருந்த 'லைப் ஜாக்கெட்' அமெரிக்காவில் சமீபத்தில் ரூ.8.39 கோடிக்கு ஏலம் போனது. நீர்நிலைகளில் பயணிக்கும் போது 'லைப் ஜாக்கெட்' அவசியம். இவை மிதப்புத்தன்மை தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும். இதிலுள்ள பிரத்யேகப் பொருட்கள் நம் உடல் எடையை விட அதிக மிதப்பு விசையை ஏற்படுத்தி தண்ணீரில் மூழ்காமல் தலைப்பகுதியை மேல் நிறுத்தி பாதுகாக்கிறது.
