/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தீவுகளின் தனித்துவம்
/
அறிவியல் ஆயிரம் : தீவுகளின் தனித்துவம்
PUBLISHED ON : அக் 27, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
தீவுகளின் தனித்துவம்
பூமியில் தாவர இனங்களில் 21 சதவீதம் தீவுகளில் மட்டுமே உள்ளன. இயற்கையை பொறுத்தவரை தீவுகள் தனித்துவமானவை. அவற்றை பாதுகாக்க வேண்டும் என ஆஸ்திரேலிய ஆய்வு தெரிவித்துள்ளது. உலகில் 2000 தீவுகள் உட்பட 3400 பகுதிகளில் ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள், 94,052 தாவர வகையை கண்டறிந்தனர். இது உலகின் மொத்த தாவரங்களில் 31 சதவீதம். இதில் 63,280 வகைகள் (21 சதவீதம்) தீவுகளில் மட்டும் காணப்படுகின்றன. பூமியின் நிலப்பரப்பில் 5.3 சதவீதம் மட்டுமே தீவுகளாக இருந்தாலும் உலகின் பல்லுயிர்களை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.