PUBLISHED ON : பிப் 12, 2026 12:08 AM

அ நிறம் | அளவு
வளைய சூரிய கிரகணம்
இந்த ஆண்டின் முதல் வளைய சூரிய கிரகணம் 2026 பிப்.17ல் நிகழ்கிறது. தென் அமெரிக்கா, அண்டார்டிகா, தெற்கு அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடல் பகுதியில் வளைய சூரிய கிரகணம் தெரியும். சூரியன், பூமி, நிலவு ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது நடுவில் வரும் நிலவு, சூரிய ஒளியை மறைப்பதால் நிலவின் நிழல் பூமியில் விழும்.
இதுதான் சூரிய கிரகணம். பூமியில் இருந்து அதிக துாரத்திலும், சிறியதாவும் நிலவு இருப்பதால், அதனால் சூரியனை முழுவதும் மறைக்க முடியாது. எனவே பூமியில் இருந்து பார்க்கும்போது சூரியனை சுற்றி வளையம் தோன்றும். இதுதான் வளைய சூரிய கிரகணம்.
