/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : ஆயுளை கூட்டும் ரத்த வகை
/
அறிவியல் ஆயிரம் : ஆயுளை கூட்டும் ரத்த வகை
PUBLISHED ON : பிப் 12, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
ஆயுளை கூட்டும் ரத்த வகை
ஒவ்வொருவருக்கும் ரத்தம் ஒரே மாதிரி இருக்காது. இதில் ஏ, பி, ஓ, ஏபி என ரத்த வகை உள்ளன. ஒருவரது ஆயுட்காலத்துக்கு உடல் நிலை, உணவு முறை, உடற்பயிற்சி உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. இந்நிலையில் ரத்த வகைக்கும், ஆயுளுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஜப்பான் டோக்கியோவில் 100 வயதுக்கு மேல் உள்ள 269 பேரிடம் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதில் மற்றவர்களை விட, 'பி' ரத்த வகை உள்ளவர்களுக்கு வயது மூப்படைவது குறைவாக நடக்கிறது என கண்டறிந்தனர். இருப்பினும் இது தொடர்பாக மேலும் ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர்.