/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : ஆயுளை குறைக்கும் சிகரெட்
/
அறிவியல் ஆயிரம் : ஆயுளை குறைக்கும் சிகரெட்
PUBLISHED ON : ஜன 03, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
ஆயுளை குறைக்கும் சிகரெட்
புகை பிடிப்பதால் புற்றுநோய், காசநோய், ஆஸ்துமா, மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிகரெட்டில் 4000 ரசாயனங்கள் உள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு சிகரெட்டும் வாழ்நாளில் 17 நிமிடத்தை குறைக்கிறது. இதுவே பெண்களுக்கு 22 நிமிடம் குறைகிறது என லண்டன் பல்கலை கல்லுாரி ஆய்வு எச்சரித்துள்ளது. இது 2000ல் எடுக்கப்பட்ட ஆய்வை விட இரு மடங்கு அதிகரித்துள்ளது. புகை பிடிக்காதவர்களின் சராசரி ஆயுட்காலத்துடன் ஒப்பிடுகையில், புகை பிடிப்பவரின் ஆயுட்காலம் 10 - 11 ஆண்டுகள் குறைகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.