/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்:செவ்வாயில் பள்ளம்
/
அறிவியல் ஆயிரம்:செவ்வாயில் பள்ளம்
PUBLISHED ON : பிப் 03, 2026 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செவ்வாயில் பள்ளம்
செவ்வாய் கோளின் 'அசிடலியா பிளான்சியா' பகுதியில் பள்ளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி மையம் நாசாவின் 'மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர்', அதன் 'ஹைரைஸ்' கேமரா வழியாக இதை படம்பிடித்தது.
பள்ளத்தின் நீளம் 0.8 கி.மீ. இது உலகின் சிறிய நாடான வாடிகன் சிட்டியை (பரப்பளவு 0.49 சதுர கி.மீ.) விட பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்பிட்டர் 2005ல் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டது.
செவ்வாய் தரைப்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம், மேலிருந்து கீழ்நோக்கி பாயும் உப்பு கோடுகள் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்தது.

