தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்


PUBLISHED ON : ஜன 22, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

சாதித்த ஜப்பான்

ஜப்பான் தன் நிலவுப்பயணத்தை 2007ல் துவக்கியது. எச்-2ஏ ராக்கெட்டில் 'சைலன்ஸ்' விண்கலத்தை அனுப்பியது. இதிலிருந்த மூன்று ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்து ஆய்வு செய்தது. அடுத்து 2022 டிச. 11ல் நிலவுக்கு 'ஹகூடா-ஆர்' விண்கலத்தை அனுப்பியது. இதிலிருந்த லேண்டர் தொழில்நுட்ப கோளாறால் நிலவின் தரையில் மோதி நொறுங்கியது. பின் 2023 செப். 6ல் அனுப்பிய ஸ்லிம் விண்கலத்திலுள்ள லேண்டர் 2024 ஜன. 19ல் நிலவில் தரையிறங்கியது. இச்சாதனையை நிகழ்த்திய 5வது நாடானது.

தகவல் சுரங்கம்

நீளமான சுரங்கச்சாலை

நார்வேயில் வெஸ்ட்லேன்ட் பகுதியில் 'லியர்டல் சுரங்கச்சாலை தான் உலகில் நீளமானது. இது லியர்டல் -- ஆர்லேன்ட் பகுதியை இணைக்கிறது. மலையை உடைத்து அமைத்துள்ள இச்சாலையின் நீளம் 24.51 கி.மீ. அகலம் 30 அடி. அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 80 கி.மீ. கட்டுமானப்பணி 1995ல் தொடங்கி 2000ல் திறக்கப்பட்டது. இப்பட்டியலில் 2வது இடத்தில் ஜப்பானின் யாமேட் சுரங்கச்சாலை உள்ளது. நீளம் 18.20 கி.மீ. 2007ல் திறக்கப்பட்டது. மூன்றாவது இடத்தில் சீனாவின் ஜாங்னன்ஷன் சுரங்கச்சாலை (18.04 கி.மீ.) உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us