/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : பளபளப்பான உலோகம்
/
அறிவியல் ஆயிரம் : பளபளப்பான உலோகம்
PUBLISHED ON : செப் 27, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பளபளப்பான உலோகம்
அறிவியல் தனிமங்களில் ஒன்று மெக்னீசியம். அறிவியல் குறியீடு எம்ஜி. அணு எண் 12. இது பளபளப்பான சாம்பல் நிற உலோகம். உருகுநிலை 650 டிகிரி செல்சியஸ். கொதிநிலை 1091 டிகிரி செல்சியஸ். 1808ல் பிரிட்டனின் ஹம்ப்ரி டேவி இதை முதன்முதலில் பிரித்தெடுத்து கண்டுபிடித்தார். 'மெக்னீசியம்' பெயரையும் சூட்டினார். பூமியில் இரும்பு, ஆக்சிஜன், சிலிக்கான் ஆகியவற்றுக்கு அடுத்து அதிகளவில் கிடைக்கும் தனிமங்களில் நான்காவது இடத்தில் உள்ளது. இது அலுமினியத்தை விட குறைந்த அடர்த்தி கொண்டது. நம் உடல் செயல்பாடுகளில் மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது.