PUBLISHED ON : டிச 21, 2025 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிலந்தி வலையில் வட்டம், குறுக்காக இழைகள் இருக்கும். வட்ட இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்கு இழைகளில் பசை இருக்காது. அதனால் சிலந்தி அதன் வலையில், குறுக்கு இழைகளில்தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது.
அப்படியே அதில் பட்டு விட்டாலும் ஒட்டாமல் இருக்க அதன் வளைந்த கால்கள், கால்களில் உள்ள பிரத்யேக ரோமங்கள் உதவுகின்றன. சிலந்திகளுக்கு அதன் வலைகளின் மூலைகளே பிடித்த இடம். அதன் உமிழ்நீராலேயே அது வலையைப் பின்னும். வலையில் ஏதேனும் இழை அறுந்தாலும் திரும்பவும் அந்த இடத்தை மிக அழகாகப் பின்னி விடும்.

