/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்:பிளாஸ்டிக் நுண்துகளின் அளவு
/
அறிவியல் ஆயிரம்:பிளாஸ்டிக் நுண்துகளின் அளவு
PUBLISHED ON : ஜன 26, 2026 10:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிளாஸ்டிக் நுண்துகளின் அளவு
காற்றில் கலந்துள்ள பிளாஸ்டிக் நுண்துகள்களின் அளவு, இதுவரை பல ஆய்வுகள் மதிப்பிட்டதை விட 10 ஆயிரம் மடங்கு குறைவு என ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. உலகில் 2014 - 2024 வரை 283 இடங்களில் எடுக்கப்பட்ட 2782 பிளாஸ்டிக் நுண்துகள் அளவீடுகளுடன், ஏற்கனவே எடுக்கப்பட்ட மற்ற ஆய்வுகளை ஒப்பிட்டு இதை கண்டறிந்தனர்.
காற்றில் கலக்கும் பிளாஸ்டிக் துகளில் கடலை விட, நிலப்பகுதியின் பங்கு 20 மடங்கு அதிகம். பிளாஸ்டிக் துகள் குறைவு என்பது, தீங்கு அளவும் குறைவு என்பது அர்த்தமல்ல. இது பூமிக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.

