உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 06, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
வியாழனை நெருங்கும் வெள்ளி
சூரிய குடும்பத்தில் இரண்டாவதாக உள்ள வெள்ளி,நான்காவதாக உள்ள வியாழன் ஆகிய கோள்கள் மிக நெருக்கமான துாரத்தில் கடந்து செல்லும் நிகழ்வு 2026 ஜூன் 9ல் நிகழ்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துஉள்ளனர். சூரிய மறைவுக்குப்பின் மேற்கு திசை வான் பகுதியில், இரு கோள்களையும் பார்க்கலாம். இதில் வியாழனை விட, வெள்ளி கோள் பிரகாசமாக தெரியும். மே தொடக்கத்தில், 2 கோள்களுக்குமான இடைவெளி 40 டிகிரி கோணமாக இருக்கும். பின் மே 7ல் 33 டிகிரி, மே 14ல் 26 டிகிரி, மே 31ல் 9 டிகிரி என மெதுவாக குறைந்து, ஜூன் 9ல் 1.9 டிகிரி கோண வித்தியாசத்தில் அமையும்.
