PUBLISHED ON : மார் 22, 2026 12:01 AM

'தினமலர்', 75 ஆண்டுகள் மலர்ந்த, மலர்ந்து கொண்டிருக்கும், தொடர்ந்து மலரப்போகும் நாளிதழ். தினமலரின் 75 ஆண்டு கால பயணம் ஒரு சகாப்தம்.
தமிழ் பத்திரிக்கை உலகில் உண்மை, நேர்மை, சமூக பொறுப்பு என்ற மூன்றையும் தன்னகத்தே கொண்டு, 75 ஆண்டுகளாக மக்களின் நன்நம்பிக்கையை பாதுகாத்து வரும் தினமலர், தமிழ் சமூகத்தின் அறிவு பயணயத்தில் ஒரு மைல்கல்லாக திகழ்கிறது.
ஒவ்வொரு பக்கத்திலும் பொறுப்புணர்வுடன் வெளியிடப்படும் செய்திகள், கருத்துக்கள், விமர்சனங்கள் என்ற முழுமையான முப்பரிமாணத்தில் வெளியாகும் தினமலர், வாசகர்களின் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளது.
சுடச்சுட செய்திகள், சூடான அரசியல் செய்திகள், தணிந்த ஆன்மிக வழிகாட்டுதல்கள், குளிர்ந்த விமர்சனங்கள் யாவையும் உள்ளடக்கி, அனு தினமும் புதுப்பொலிவுடன் மலர்ந்து, மக்களின் கரங்களில் தவழும் ஒரே நாளிதழ் தினமலர் என உறுதியிட்டு சொல்ல முடியும். அரசியல் செய்திகளில் துல்லியம், சமூகச் செய்திகளில் உணர்வு, பொது விவரகாரங்களில் அளவுத் தன்மை, கருத்துகளில் சுயாதீனம் என்ற பண்புகளை தினமலர் தன் அடையாளங்களாக காத்து வருகிறது.
தினமலர், தமிழ் சமூகத்தின் மாறிவரும் அரசியல், பொருளாதாரம், பண்பாடு, அறிவியல், ஆன்மிகம், வாழ்வியல் என அனைத்தையும் தன் பக்கங்களில் பதிவு செய்யும் ஒரு சாட்ச்சிப் பயணம்.
ஒரு நாளிதழ் செய்திகளை மட்டும் வழங்குவதில்லை. அது சமூகத்தின் திசையை பிரதிபலித்தும், மக்களின் சிந்தனைகளையும் வடிவமைத்தும் செயல்பட வேண்டும். 75 ஆண்டுகளாக உண்மையின் குரலாக நேர்மையின் பாதையில் தமிழ் மக்களின் நம்பிக்கையாக ஒளிர்ந்து வரும் தினமலர், தமிழ் பத்திரிக்கை உலகில் ஒரு பெருமைக்குரிய அத்தியாயம்.
ஒரு நாளிதழின் வெற்றி அதன் அச்சு எண்ணிக்கையால் மட்டும் அளவிடப்படுவதில்லை. அது எத்தனை தலைமுறைகளின் வாழ்க்கையோடு கலந்துள்ளது. எத்தனை கோடி மக்களின் மனங்களில் பதிவாகியுள்ளது என்பதில் தான் அதன் உண்மையான மதிப்பு நிறைந்துள்ளது. அந்த அளவுகோலில் தனித்த இடம் பெற்ற ஒரு பெருமை மிகு பெயர் தினமலர்.
காலம் மாறலாம், ஆனால் உண்மையின் தேவை ஒருபோதும் மாறாது. பத்திரிக்கை என்பது அதிகாரத்தின் குரல் அல்ல, மக்களின் குரல். அந்த மக்களின் குரலை நேர்மையாகவும், தெளிவாகவும், பொறுப்புடனும் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தினமலர் என்றும் முன்னிலையில் இருக்கிறது. தினமலர் தமிழக மக்களின் வாழ்வியலில் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்பதே உண்மை.
இந்த பவளவிழா ஆண்டை முன்னிட்டு, தினமலர் படைப்பாளர்கள், நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் யாவருக்கும் என்னை உள்ளடக்கிய வாசகர்களின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளும். இன்னும் பல ஆண்டுகள் இதே உற்சாகத்துடன் பத்திரிக்கை சேவை தொடர 'ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்' ஊழியர்கள் மற்றும் குழுமம் சார்பாக வாழ்த்துகள்.
ஜெ.சுந்தரலிங்கம்
ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், சென்னை
