PUBLISHED ON : மே 09, 2026 12:00 AM

தினமலர் நாளிதழ் 75-ம் ஆண்டு வெற்றிகரமான பயணத்தை நிறைவு செய்வதற்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகளும்,வாழ்த்துகளும்.
தமிழகத்தில் மக்களின் நம்பிக்கையை நேர்மையாலும்,உண்மையாலும் பெற்றுள்ள மிகச் சிறந்த நாளிதழாக தினமலர் திகழ்கிறது செய்திகளை நம்பகத்தன்மையுடன் வழங்கி , பல தலைமுறைகளின் ஆதரவை பெற்றிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.
எங்கள் சங்கரா கல்வி நிறுவனங்கள் சார்பாக தினமலரில் விளம்பரங்கள் வழங்கிய ஒவ்வொரு முறையும் மாணவர் சேர்க்கையில் நல்ல வரவேற்பும், சிறந்த மாற்றங்களும் கிடைத்துள்ளன. மேலும் தினமலர் வழிகாட்டி கல்வி கண்காட்சியில் தொடர்ந்து பங்கேற்றதன் மூலம், மாணவர்கள் மற்றும் பெற்றோரை நேரடியாக சென்றடைந்து சிறந்த சேர்க்கை பலன்களை பெற்றுள்ளோம்.
கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு தினமலர் தொடர்ந்து வழங்கி வரும் பங்களிப்பு மிகவும் மதிப்பிற்குரியது. இனியும் பல ஆண்டுகள் வெற்றிகரமாக மக்களுக்கு சேவை செய்ய எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
சிறு வயது முதல் இன்று வரை காலையில் ஒரு கையில் பில்டர் காபியும்,மற்றொரு கையில் தினமலரும் இருப்பது, என் வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. அரசியல் சார்பின்றி உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செய்திகளை வழங்கும் நாளிதழாக தினமலர் எப்போதும் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.
மேலும் தினசரி ராசி பலன் மற்றும் ஆன்மிகச் செய்திகள் ஆகியவற்றையும் நான் மிகவும் விரும்பி தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
இப்படிக்கு
ராமச்சந்திரன் டி.பி. செயலர் , சங்கரா கல்வி நிறுவனங்கள்.
