தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/ மலர்ந்தும் மலராத பாதி மலரல்ல

மலர்ந்தும் மலராத பாதி மலரல்ல

மலர்ந்தும் மலராத பாதி மலரல்ல


PUBLISHED ON : ஏப் 22, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மலர்ந்தும் மலராத பாதி மலரல்ல, இது ஓர் உண்மையான மலர்.

இஸ்ரேல் பற்றியும் தெரிந்து கொள்ளலாம், இலுப்பக்குடியில் என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். காலை ஆரம்பிப்பதே தினமலர் நாளிதழில் தான். தினமலர் வாசிக்கும் போது அப்படியொரு இன்பம்.

ஆன்மிகமலர், சிறுவர்மலர், வாரமலர் ஆகியவை ராமாயணம், மகாபாரதம் போன்ற புத்தகங்கள்.

மருத்துவ உலகத்திற்கு இதன் சேவை உன்னதமானது. ஒரு மனிதன் கோடை காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதில் தொடங்கி பெரிய மருத்துவ பிரச்னைகள் பற்றியும் கூட தினமலர் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வைட்டமின்-டி குறைபாட்டால், உடல் சோர்வு, எலும்பு வலி, முதுகு வலி, மனச்சோர்வு, முடி உதிர்தல், புண் ஆறாமை மற்றும் மூளையில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வைட்டமின்-டி, 1922ல் அடால்ப் விண்டாஸ் என்பவரால் கண்டறியப்பட்டது. அவரே இப்போது இருந்தால், தினமலரை பார்த்திருப்பார். ஏனென்றால், 'வைட்டமின்-டி பெற, காலை 10:00 - 11:00 அல்லது மாலை 4:00 - 5:00 மணிக்கு சூரியஒளியில் நில்லுங்கள்' என்பதை, மிக சாதரணமாக, எளிதில் புரியும்படி, அனேக நாட்கள், கட்டம் கட்டி வெளியிடுகிறது தினமலர். எந்த ஒரு மருத்துவ கண்டுபிடிப்பும் உயிர் காக்கும் கவசமாக மாறுவது அதன் பயன்பாட்டில் தான். கந்த சஷ்டி கவசம் போல் நமக்கு கவசமாக இருப்பது தினமலர் தான். ஏனென்றால் வைட்டமின்-டி போன்ற மருந்துகளை கவசமாக மாற்றுவது தினமலர் தான். மருத்துவத்தை, மக்களுக்கு புரியும்படி கொண்டு சென்று, மக்களை கடைபிடிக்க வைப்பதில் முதலிடம் தினமலருக்கே.

தினமலரின் தாரக மந்திரம், 'தேசியம், தெயவீகம்' என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், அதன் தாரக மந்திரம், 'இரவு பயணங்களை தவிர்ப்பது'. எவ்வளவு அழகான, தெளிவான உயிர் காக்கும் முன்னெச்சரிக்கை. இதையும் கட்டம் கட்டி அடிக்கடி வெளியிடுவார்கள். வாசகர்கள் விபத்தில் சிக்கிவிடக் கூடாது என்று அக்கறையோடு செயல்படும் தினலருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

டாக்டர் ஜெ. சங்குமணி

மருத்துவ கல்வி இயக்குனர் (ஓய்வு), மதுரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us