தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/ பயனுள்ள தகவல்களை அள்ளி வழங்கும் பொக்கிஷம்

பயனுள்ள தகவல்களை அள்ளி வழங்கும் பொக்கிஷம்

பயனுள்ள தகவல்களை அள்ளி வழங்கும் பொக்கிஷம்


PUBLISHED ON : ஜூன் 14, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 14, 2026 05:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மொழிவது அறமொழி' என்பது, அவ்வையார் அருளிய ஆத்திச்சூடியில் இடம் பெற்ற ஒரு வரியாகும். இந்த வரி, 'தினமலர்' நாளிதழின் பண்பையும், பணியையும் முழுமையாக எடுத்துரைக்கும் அறிவுரையாகவே திகழ்கிறது. உண்மையை தெளிவாகவும், தயக்கமின்றியும், சமரசமில்லாத சொற்பாங்குடனும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், தினமலர் நாளிதழ் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. செய்தியை வெறும் தகவலாக அல்லாது, சிந்திக்க வைக்கும் சமூகப் பொறுப்பாகக் கருதி வழங்கும் அணுகுமுறை அதன் மிகப்பெரிய பலமாகும்.

தினமலர் நாளிதழின் எழுத்து நடை என்பது, வெறும் வாசிப்பிற்கு அல்ல; அது விழிப்புணர்வை உருவாக்கும் ஒரு சக்தி. ஆழமான கருத்துக்களை எளிய மொழியில், நேர்மையான வெளிப்பாட்டில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் திறன், இதழின் நம்பகத்தன்மையை உயர்த்துகிறது. உண்மையை மறைமுகமின்றி வெளிப்படுத்தும் பாங்கு, தினமலர் நாளிதழின் அடையாளமாக விளங்குகிறது.

இதனால், வாசகர்களிடையே தன்னம்பிக்கை, தெளிவான சிந்தனை மற்றும் சமூகப்பொறுப்பு போன்றவை இயல்பாகவே உருவாகின்றன. மக்களின் எண்ணங்களை திறம்பட வெளிப்படுத்துவதற்கு, தினமலர் செய்திகளை உரைக்கும் பாங்கு ஒரு உத்வேகமாக அமைகிறது.

பலதரப்பட்ட வாசகர்களும் நாடிச்செல்லும் நாளிதழாக தினமலர் விளங்குகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, மாணவர்கள் முதல் அறிஞர்கள் வரை, அனைவருக்கும் தேவையான தகவல்களை தரக்கூடிய அறிவுக்களஞ்சியமாகவும் திகழ்கிறது. குறிப்பாக மாணவர்களுக்கான கல்வி செய்திகள், போட்டி தேர்வு தகவல்கள், திறன் வளர்ப்பு குறிப்புகள், இளைய தலைமுறைக்கான வழிகாட்டுதல்கள் போன்றவை, நாளைய தலைமுறையை உருவாக்கும் கல்விப்பணியாகவே அமைகின்றன. பள்ளி மாணவர்கள், கல்லுாரி இளைஞர்கள், போட்டி தேர்விற்கு தயாராகும் பலருக்கும், பயனுள்ள தகவல்களை வழங்கும் ஒரு பொக்கிஷமாகவே தினமலர் திகழ்கிறது.

ஆன்மிக உலகில் தினமலர் வகிக்கும் பங்கு அளப்பரியது. கோவில்களின் வரலாறுகள், ஆன்மிக பாடல்களின் விளக்கங்கள், அரிய தலங்களின் சிறப்புகள், அறநெறி சிந்தனைகள் என, எண்ணற்ற தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, ஆன்மிக அறிவின் ஒளியை பரப்பும் பணியை, அது தொடர்ந்து செய்து வருகிறது. பலருக்கு தெரியாத தெய்வீக மரபுகளையும், தமிழரின் ஆன்மிக பாரம்பரியங்களையும் எளிமையாக எடுத்துரைப்பதில் தினமலர் நாளிதழுக்கு தனி மரியாதை உண்டு.

மேலும், தினமலர் நாளிதழின் தெளிவான அச்சுத்தரம், நேர்த்தியான வடிவமைப்பு, பளிச்சென காட்சியளிக்கும் செய்தி வழங்கல் போன்றவை, அதன் வாசிப்பை ஒரு இனிய அனுபவமாக மாற்றுகின்றன. தரமான முறையில் செய்திகளை தருவது மற்றும் வாசிப்பிற்கு ஏற்ற வடிவமைப்பு என்பவை, இதழின் உயர்ந்த தொழில்முறை அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, ஒரு வாசகர் முதலில் கவரப்படுவது அதன் செய்தித்தாள் தரம், சீரான வடிவமைப்பு மற்றும் அழகாக பதிப்பிக்கும் தன்மையாலேயே என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

'நானில் முழுதும் நயந்தரும் கல்வி' என்ற உயரிய கருத்திற்கு ஊடக உலகில் உயிர் கொடுத்து நிற்கும், ஒரு சிறந்த நாளிதழ் தினமலர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. செய்தியாகவும், கல்வியாகவும், சமூக சிந்தனையாகவும், பண்பாட்டு பாதுகாப்பாகவும், பொழுதுபோக்கு அம்சங்களாகவும், மக்களோடு பயணிக்கும் இந்த ஊடக விருட்சம் இன்னும் பல நுாற்றாண்டுகள் வளர்ந்து, அறிவையும் அறத்தையும் மக்களிடம் பரப்பும் முன்னோடி நாளிதழாக வளர வாழ்த்துக்கள்!!!

இரா.செந்தில்குமார், IRTS

தலைவர், வணிகப்பிரிவு

தெற்கு ரயில்வே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us