தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/ முழுமையான தினப்பத்திரிக்கை 'தினமலர்'

முழுமையான தினப்பத்திரிக்கை 'தினமலர்'

முழுமையான தினப்பத்திரிக்கை 'தினமலர்'


PUBLISHED ON : மே 19, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 19, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு முழுமையான தினப்பத்திரிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தினமலர் நாளிதழ் திகழ்கிறது.

ஒரு நாளிதழ், ஆழமான கருத்துகளைக் கூட சாதாரண மனிதரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிதாகச் சொல்ல வேண்டும். தொகுப்பாய்வுகள், நாட்டின் தொழில், வருவாய் குறித்த தகவல்களை புரியும்படி விளக்க வேண்டும். தற்போது நடந்தவைகளை சுருக்கமாகவும், வேகமாகவும் கூறும் அதே சமயம், பழைய விஷயமாக இருக்கக் கூடாது; சொன்ன விஷயத்தையே மீண்டும் சொல்லக் கூடாது.

பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து இருக்க வேண்டும். சார்பு நிலையாக இல்லாமல் நடுநிலைமை வகிக்க வேண்டும். படிப்பவரது அறிவாற்றலை கூட்ட வேண்டும்.

இத்தகைய அம்சங்கள் அனைத்தும் இருக்கும் ஒரே நாளிதழ் தினமலர் தான். ஓர் ஆண்டுக்கு முன் வந்த தினமலர் நாளிதழை படித்தால் கூட அறிவாற்றல் வளரும். 5ம் வகுப்பு மாணவர்கள் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வரை காலையில் எழுந்தவுடன் படிப்பது தினமலரை தான்.

தினமலர் நாளிதழ் ஒரு முழுமையான தினப்பத்திரிக்கை. 75 ஆண்டுகளை கடந்த தினமலர் நாளிதழை மனதார வாழ்த்துகிறேன்.

டாக்டர் சுஜாதா சங்குமணி

நந்தினி நர்சிங் ஹோம், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us