/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
மாணவர்களின் அறிவுக்கண்ணை திறக்கும் ஒளிவிளக்கு 'தினமலர்'
/
மாணவர்களின் அறிவுக்கண்ணை திறக்கும் ஒளிவிளக்கு 'தினமலர்'
மாணவர்களின் அறிவுக்கண்ணை திறக்கும் ஒளிவிளக்கு 'தினமலர்'
மாணவர்களின் அறிவுக்கண்ணை திறக்கும் ஒளிவிளக்கு 'தினமலர்'
PUBLISHED ON : நவ 05, 2025 12:00 AM

என் இளம் பருவத்திலிருந்தே நான் 'தினமலர்' வாசகன். அப்போது, திருநெல்வேலி பதிப்பை வாசிப்பேன். இப்போது, 'தினமலர்' படிக்கத் தொடங்கி, 40 ஆண்டுகளாகிவிட்டன.
நான், 'தினமலர்' வாசகனாக இருப்பதால், சமுதாய போக்குகளை திரிபுகள் இல்லாமல் தெரிந்துகொள்ள முடிகிறது. விஞ்ஞானம், அறிவியல் என புதுமைகளை தெரிந்துகொள்ள முடிகிறது. பொது அறிவை வளர்த்துக்கொள்ள முடிகிறது. இவையெல்லாம், என் பள்ளிகளை நிர்வகிக்க, பெரிதும் உதவியாக இருக்கின்றன.
பள்ளிகள் நடத்துவதால், மாணவர் சார்ந்த விஷயங்களை நோக்கியே எனது கவனம் இருக்கும். அந்த வகையில், சனிக்கிழமை வெளியாகும் 'சிறுவர் மலர்' இணைப்பு, சிறுவர்களுக்கான ஓர் தரமான புத்தகம்.
அதற்கடுத்து, 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' நாளிதழ். வகுப்பறையை தாண்டி, பாட புத்தகத்தின் கருத்துக்களை, மாணவ செல்வங்களுக்கு எளிமையாக எடுத்துரைக்கிறது. அது மட்டுமல்லாது, மாணவர்களின் பொது அறிவை வளர்க்க, அறிவியல் விஷயங்களை மிக தெளிவாக வழங்குகிறது.
இன்னாளில் வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் போதாது. மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வினாடி - வினா, சிறுகதை, புதிர் உள்ளிட்ட பல்வேறு உத்திகள் தேவைப்படுகின்றன. அவற்றையெல்லாம், 'பட்டம்' அழகாக வழங்குகிறது.
தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் பொது அறிவை வளர்ப்பதில் 'பட்டம்' பங்காற்றியுள்ளது என்றால், அதில் எள்ளளவும் ஐயமில்லை. பள்ளி பருவத்தில் அவர்களுக்கு கிடைக்கும் இந்த வாசிப்பு பயிற்சி, அவர்களுடைய வாசிப்பு திறனை அதிகரித்து, 'நீட்' போன்ற போட்டித் தேர்வுகளை சந்திக்கும் போது கைகொடுக்கிறது. வெற்றிபெறவும் செய்கிறது.
மாணவர்கள் மட்டுமல்லாது, ஆசிரியர்களும் பெற்றோரும் கூட 'பட்டம்' நாளிதழை படிக்கின்றனர். கடந்த 2016 அக்டோபரில், 'பட்டம்' தொடங்கப்பட்டபோது, அது முதலில் சென்றடைந்த பள்ளிகளில் எங்கள் பள்ளிகளும் உள்ளன என்பதில் எங்களுக்கு பெருமை!
வாசிக்கத் தூண்டும் வகையில், சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை எவ்வித பாரபட்சமும், பயமும் இன்றி, உள்ளது உள்ளபடியே உரைக்கும் நாளிதழ் தினமலர். போற்றுதலுக்குரிய 'தினமலர்' நிர்வாகிகளுக்கும், அதன் ஊழியப் பெருமக்களுக்கும் முன்னாள் இந்திய விமானப்படை வீரர் என்ற முறையில், தேசிய மற்றும் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த கல்வியாளர் என்ற முறையில், இந்த பவள விழா ஆண்டில், என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
முனைவர். என்.விஜயன்
தலைவர் மற்றும் மூத்த தலைமை ஆசிரியர்
சீயோன் மற்றும் ஆல்வின் பள்ளிகள் குழுமம்,
சென்னை.

