sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தினமலர் பவள விழா

/

தமிழுக்கும், தமிழர்க்கும் கிடைத்த வரப்பிரசாதம் 'தினமலர்'

/

தமிழுக்கும், தமிழர்க்கும் கிடைத்த வரப்பிரசாதம் 'தினமலர்'

தமிழுக்கும், தமிழர்க்கும் கிடைத்த வரப்பிரசாதம் 'தினமலர்'

தமிழுக்கும், தமிழர்க்கும் கிடைத்த வரப்பிரசாதம் 'தினமலர்'


PUBLISHED ON : அக் 31, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 31, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தினமலர்' குடும்பத்தினர் எங்களுடைய, நெருங்கிய நீண்டகால குடும்ப நண்பர்கள். 'தினமலர்' 1992ல் கோவையில் வெளிவரத் துவங்கியது. அதுமுதல், நாள் தவறாமல் காலை காபியும், தினமலரும் என் வாழ்க்கையின் இணைபிரியா அங்கமாகிவிட்டன.

நல்லதொரு தரமான காகிதம், தெளிவான அச்சு என்பதால் கையில் வைத்திருப்பதற்கும், படிப்பதற்கும் நேர்த்தியான ஒரு நாளிதழ். தினமலர் வெறும் செய்திகளோடு மட்டும் நில்லாமல், கோவையின் வளர்ச்சியில் பல்வேறு கோணங்களில் முக்கியமான, முழுமையான பங்காற்றல் கொண்டுள்ளது.

சமூகம் சார்ந்த செய்திகள், கோவில் திருவிழாக்கள், கோவையின் ஏரி, குளம், மரங்கள், சுற்றுப்புற சூழல் அனைத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிற ஒரு நாளிதழ். தினமலர் செய்திகளால் கோவை மாநகரம் மேலும் மெருகேற்றப்படுகிறது.

முன்பு, வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்த 'சிறுவர் மலர்' தற்போது சனிக்கிழமை வருகிறது. பெயர்தான் சிறுவர் மலரே தவிர, அதில் இடம்பெறும் செய்திகள் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

அதேபோன்று, ஞாயிற்றுக்கிழமை 'வாரமலர்' வருகிறது. அதில் பல்வேறு மனிதர்களின் அனுபவங்கள், பல்வேறு நாடுகளின் சிறப்புகள் இடம்பெறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை வாரமலர் படிக்காவிட்டால், ஏதோ ஒன்றை தவறவிட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த அளவுக்கு எல்லாரிடத்திலும் ஓர் ஈர்ப்பு கொண்டு, அனைத்து வியாபாரிகளுக்கும் முழுமையான பேராதரவை அளித்து வருகிறது தினமலர் நாளிதழ்.

தினமலர் நாளிதழ், தமிழுக்கும், தமிழர்களுக்கும் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்!

தினமலரின் பயணம் இனிதே தொடரட்டும்!!

இதன் பணிகள் வளர்பிறைபோல் வளர்ந்து, புகழ்பெறட்டும்!!!

வருங்கால சந்ததியினரும் வரவேற்கத்தக்க சிறந்த நாளிதழாகத் திகழட்டும்!!!

இப்படிக்கு,

தாமோதரசாமி சீனிவாசன்

நிர்வாக இயக்குநர்,

ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல்ஸ் குரூப், கோயம்புத்துார்






      Dinamalar
      Follow us