தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/ வருங்கால தலைமுறையினருக்கான முன் மாதிரி 'தினமலர்'

வருங்கால தலைமுறையினருக்கான முன் மாதிரி 'தினமலர்'

வருங்கால தலைமுறையினருக்கான முன் மாதிரி 'தினமலர்'


PUBLISHED ON : ஏப் 25, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 25, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ் பத்திரிகை உலகில் தனித்துவமான இடத்தை பெற்ற தினமலர் நாளிதழ், தனது 75ஆம் ஆண்டு வைபவத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

வார்த்தைகள் மலர்ந்த பூந்தோட்டமாகவும், வாசகர்களின் நம்பிக்கை தூணாகவும் விளங்கும் தினமலர், எழுபத்தைந்து ஆண்டுகள் நீண்ட எழுச்சிப் பயணத்தில் உண்மை, நேர்மை, நம்பிக்கை ஆகியவற்றை வழிகாட்டியாகக் கொண்டு சமூகத்தின் நெஞ்சில் நிலையான இடத்தை பெற்றுள்ளது.

விடியற்கால ஒளியாக ஒவ்வொரு நாளும் வாசகர்களின் கைகளில் வந்து சேர்ந்து, உலக செய்திகளை உண்மையின் குரலாக வழங்கி, கல்வி, கலாசாரம், அரசியல், சமூக விழிப்புணர்வு போன்ற பல துறைகளில் மக்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது.

காலங்கள் மாறினாலும் கண்ணோட்டம் மாறாமல், சத்தியத்தின் பாதையில் சாதனை படைத்து, பதிப்பின் ஒவ்வொரு வரியிலும் பண்பும் பண்பாட்டையும் கலந்த செய்திகளை வழங்கி, தமிழின் தாளத்தில் துடிக்கும் நம்பிக்கையின் இதயமாக தினமலர் திகழ்கிறது.

இந்த 75 ஆண்டுகள் சாதனைகள் நிறைந்த பயணமாக மட்டுமல்லாது, வருங்கால தலைமுறையினருக்கான முன்மாதிரியாகவும் விளங்குகிறது. இதே உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேலும் பல ஆண்டுகள் சேவை செய்து, தமிழ் உலகிற்கு பெருமை சேர்க்கும் என நம்புகிறோம்.

பவள விழா கொண்டாடும் இந்நாளில் பாராட்டுகள் மலரட்டும்; நூறு ஆண்டுகள் கடந்தும் நிறைவோடு வளர்ந்து விளங்க தினமலருக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தினமலர் தொடர்ந்து வளர்ச்சி பெற்று, மேலும் பல வெற்றிகளை அடைய இறைவனை வேண்டுகிறோம். இன்னும் பல வெற்றிகரமான ஆண்டுகளை நோக்கி முன்னேற வாழ்த்துக்கள்!

அன்புடன்,

ராஜகோபால் மற்றும் சுரேஷ்

நியமிக்கப்பட்ட பங்குதாரர்கள், சங்கீதா வெஜ் ரெஸ்டாரண்ட்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us