/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
தமிழக வரலாற்றுக்கும் தொன்மை சிறப்புகளுக்கும் பெரிதும் தொண்டாற்றி வருகிறது 'தினமலர்'

PUBLISHED ON : டிச 29, 2025 03:56 AM

நான் தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். தொல்லியல், வரலாறு, நீர் மேலாண்மை, கல்வெட்டுகள் தொடர்பான கட்டுரைகளை 'தினமலர்' நாளிதழில் எழுதியுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இதை காட்டிலும், 'கடந்த 40 ஆண்டுகளாக தினமலர் வாசகர்' என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
தமிழ் நாளிதழ்களில் தொன்மம், கல்வெட்டு, வரலாறு, அகழ்வாராய்ச்சிகள் குறித்த செய்திகளுக்கு தாராளமாக பக்கங்களை ஒதுக்குவதில் தினமலர் முதன்மையானது. இதை ஏதோ கடமைக்காக செய்யாமல், அனைத்து தரப்பு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான எழுத்து நடையில் விளக்கி, வண்ண புகைப்படங்களுடன் தினமலர் வெளியிடுவது பாராட்டுக்குரியது!
கோவில் விசேஷங்களில் எடுக்கப்படும் நிழற்படங்களை அழகாக பெரிய அளவில் வெளியிடுவதும் ஒருவகையில் ஆன்மிக தொண்டு தான்! அரசியல் மற்றும் சமூக பிரச்னைகளை மட்டுமே பிரதானப்படுத்தாமல், ஜனரஞ்சகமான தகவல்களையும் சுவைபட வழங்குவது தினமலர் நாளிதழின் தனிச்சிறப்பு.
'தமிழக வரலாற்றுக்கும் தொன்மை சிறப்புகளுக்கும் பெரிதும் தொண்டாற்றி வரும் தினமலர், மேலும் சிறப்புற வேண்டும்' என்பது ஒரு வாசகனாக என் வாழ்த்து மட்டுமல்ல... ஆசையும் கூட! 100 ஆண்டுகள் கடந்தும் மக்கள் சேவையில் தினமலர் ஜொலிக்க என் வாழ்த்துகள்.
கி.ஸ்ரீதரன்,
ஓய்வு பெற்ற துணை கண்காணிப்பாளர்,
தமிழக தொல்லியல் துறை.