sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தினமலர் பவள விழா

/

திறமைசாலிகளை அடையாளம் காட்டும் 'தினமலர்'

/

திறமைசாலிகளை அடையாளம் காட்டும் 'தினமலர்'

திறமைசாலிகளை அடையாளம் காட்டும் 'தினமலர்'

திறமைசாலிகளை அடையாளம் காட்டும் 'தினமலர்'


PUBLISHED ON : ஜன 05, 2026 03:09 AM

Google News

PUBLISHED ON : ஜன 05, 2026 03:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தினமலர்', சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஒட்டுமொத்த குடும்பத்துக்குமான நாளிதழ். உயர்தரமான தாள்களில் அச்சிடப்படும் தரமான செய்திகள், உண்மையை வாசகர்களுக்கு கொண்டு செல்வதில் எங்கும், எப்போதும் சமரசம் செய்து கொண்டதில்லை. கொண்ட கொள்கையில் பூண்டுள்ள உறுதிதான், 75 ஆண்டுகளாக வாசகர் மனதில் தினமலரை சிம்மாசனமிட்டு அமர வைத்துள்ளது.

தினமலர் குரல் கொடுத்து, தீர்க்கப்பட்ட மக்கள் பிரச்னை ஏராளம். சிறிய கிராமங்களில் கூட மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை அறிந்தால், அதை செய்தியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, தீர்வு கண்டுள்ளது தினமலர்.

'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற நக்கீரரின் வாதம், தினமலர் நாளிதழ் செய்திகளில் அதிகாரிகளையும், அரசு இயந்திரத்தை நோக்கியும் தர்க்கம் செய்வதை காண முடியும்.

அரசியல், தொழில், அறிவியல், விளையாட்டு, மருத்துவம் என ஜனரஞ்சகமாக, செய்திகளை வாசகர்களுக்கு அள்ளித்தருகிறது. ஒரு நாள் தினமலர் செய்திகள், அந்த நாள் முழுமைக்கும் போதுமானது. அவ்வளவு செய்திகள் இடம் பெறுகின்றன. திறமையான மாணவர்கள், விளையாட்டு வீரர்களை உலகிற்கு அடையாளம் காட்டியதில், 'தினமலர்' நாளிதழின் பங்களிப்பு அளப்பரியது.

தினமலர் நாளிதழின் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட இணைப்பிதழ்களும் குறிப்பிடத்தக்கவை. சிறுவர் மலரில் வெளியாகும் கதைகள், வாசகர் அனுபவங்கள், கவிதைகள், கட்டுரைகள் எப்போது படித்தாலும், நம்மை சிறுவர்களாக இருந்த காலத்தை நோக்கி நகர்த்தக் கூடியது. நாமும் ஏதாவது எழுதலாமா என்று சிந்தனையைத் துாண்டி விடும். வாசகர்களின் படைப்புகளுக்கு ரொக்கப் பரிசு கொடுத்து, படைப்பாளிகளாக உருவாக்கி வருவது பாராட்டுதலுக்குரியது.

வாசகர்களின் இல்லங்களில் மட்டுமல்ல, உள்ளங்களிலும் தினமலர் பல நுாற்றாண்டுகளை கடந்து தினம் தினம் மலரட்டும்!

நல்வாழ்த்துக்களுடன்!

சுந்தர் இராமகிருஷ்ணன்,

நிர்வாக அறங்காவலர், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை,

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள், கோவை,






      Dinamalar
      Follow us